சதுப்புநிலத்தில் சேகர்பாபு தந்த அனுமதியை நீக்குவீர்களா, முதல்வரே?

சதுப்புநிலத்தில் சேகர்பாபு தந்த அனுமதியை நீக்குவீர்களா, முதல்வரே?
Published on

உலக சதுப்பு நிலங்கள் நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் இன்று சாதனை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ராம்சார் ஈர நிலம் பற்றி மிகவும் பெருமிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அறப்போர் இயக்கத்தின் சார்பில் அரசை நோக்கி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.  

”ராம்சார் நிலம் என்று அறிவித்து விட்டு அதன் உள்ளேயே 1250 வீடுகள் கொண்ட குடியிருப்பு அடுக்கு மாடி கட்டிடத்திற்கு அனுமதியும் கொடுத்த மேதாவி அரசாங்கத்தை வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா? அதை தமிழகத்திற்கு வந்த முதலீடு என்று பெருமை வேற!!

இன்னும் கூட அந்த கட்டிட அனுமதியை ரத்து செய்யவில்லை. ஆனால் இயற்கை பாதுகாவலர்கள் போல நல்லா நாடகம் நடத்துவார்கள்.

CMDA அமைச்சர் சேகர் பாபு கொடுத்த அனுமதியை ரத்து செய்வீர்களா மிஸ்டர். ஸ்டாலின்?” என்று அறப்போர் இயக்கம் கேட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com