ரூ.39 கோடி ரேசன் பருப்பு ஊழல்- அறப்போர் இயக்கம் புகார்

அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன்
அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன்
Published on: 

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ. 39 கோடி அளவுக்கு ரேசன் கடைகளுக்கான பருப்பு கொள்முதலில் ஊழல் செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறப்போர் இயக்கத்தின் சார்பில் 19.06.2024 அன்று இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 01.08.2024 அன்று கூடுதல் புகாரும் கொடுக்கப்பட்டது. 

புதிய ஆட்சி வந்தபிறகு தற்போது இது தொடர்பாக கூடுதல் கடிதத்தை அறப்போர் இயக்கம் நேற்று இலஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு அனுப்பியுள்ளது.

ஏழை மக்கள் பயன்படுத்தும் ரேசன் கடை பொருளில் செய்த ஊழலுக்காக, இப்பொழுதாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்களா என்று அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கேட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com