ஊழல் அதிகாரிக்கு மின்வாரியத்தில் முக்கியமான பதவியைத் தருவதா?

ஊழல் அதிகாரிக்கு மின்வாரியத்தில் முக்கியமான பதவியைத் தருவதா?
Published on: 

மின்சார வாரியத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பாலச்சந்தரை மின்சார வாரியத்தில் விநியோகப் பிரிவின் இணை இயக்குநராக நியமித்ததை அறப்போர் இயக்கம் கண்டித்துள்ளது. 

”தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபட்ட அதிகாரியைப் பணியிடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும். டெண்டர் செட்டிங் செய்து, சிலைகளை நிறுவியபிறகு அதற்கு டெண்டர் போட்ட அதிகாரியான பாலச்சந்தர், ஏற்கெனவே சீரழிந்த நிலையில் இருக்கக்கூடிய மின்சார வாரியத்தில் என்ன செய்வார்?” என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

”முதலமைச்சர் விஜய் தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?? அறப்போரின் தாம்பரம் மாநகராட்சி புகாரின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன??ஏற்கனவே மின்மாற்றி ஊழலில், மின்கடத்தி ஊழலில் விசாரிக்கப்படும் ராஜேஷ் லக்கானியை அதே மின்சார வாரியத்தின் இயக்குநராக நியமித்ததன் மூலமாக இந்த ஊழல்களின் மீதான நடவடிக்கையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவருகிறோம்.

தற்பொழுது பாலச்சந்தரை நியமித்ததன் மூலமாக இனி மின்சார வாரியம் மேலும் ஊழலில் சீரழிய வழிவகை செய்யப்பட்டுள்ளது!

அரசின் இந்த நியமனங்கள் குறித்து முதலமைச்சர் விஜய், துறை அமைச்சர் நிர்மல் குமார் இருவரும் என்ன விளக்கம் சொல்வார்கள்? இரு நியமனங்களும் மின்சார வாரியத்தை மேலும் சீரமைக்குமா? அல்லது மேலும் சீரழிக்குமா?

இந்த இரு நியமனங்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.” என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com