தமிழ்நாடு அரசு கேபிள் டிவி
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி

அப்போ 30 இலட்சம், இப்போது 10 இலட்சம்!

அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையை தி.மு.க. ஆட்சியில் முறையான பராமரிப்பதில்லை என்றும் இதனால் கேபிள் இணைப்புகள் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

”கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கேபிள் இணைப்புகள் 30 லட்சமாக இருந்தன. இப்போது சேவை மையங்களின் குறைபாடுகள் காரணமாகவும், செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாகவும் சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது. இந்நிலையில், Conditional Access System (CAS) நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய AMC தொகையை முறையாக செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனத்தினால் கடந்த 15.6.2024 அன்று காலை முதல் தமிழகமெங்கும் உள்ள அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், ”இந்தத் தொழிலை நம்பியுள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், அரசு கேபிள் டிவி நேரடி வாடிக்கையாளர்களும், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள கேபிள் டிவி தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது. திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.-ஐ முடக்க நினைக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கண்டனமும் தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com