தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேக்கர் நியமனம்!

CM Vijay extended his congratulations to the governor Arlekar
தமிழக ஆளுநர் அர்லேகருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
Published on: 

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தின் முழு நேர ஆளுநராக இருந்த அர்லேக்கர், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தின் முழு நேர ஆளுநராக அர்லேக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு முதல் அர்லேகர் ஆளுநராகப் பதவி வகித்த கேரள மாநிலத்தின் ஆளுநராக, சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மதூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் ஆளுநராக துஷ்யந்த் கெளதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கர்நாடகம், ஒடிசா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, முதல்வர் விஜய் தனது சமூக ஊடகப்பக்கத்தில், "தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள், தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தின் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த 10 நாள்களுக்குள், அவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் பன்னிரண்டு மசோதாக்களுக்கு அர்லேகர் தனது ஒப்புதலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com