ஆர்ம்ஸ்ட்ராங்
ஆர்ம்ஸ்ட்ராங்

அரசியல் கட்சித் தலைவர் கொலை! சென்னையில் கொடூரம்!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. இன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர் கும்பல் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங்க், சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இவர் பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சுயேச்சை உறுப்பினராக இருந்தவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com