ஆர்.கே. சுரேஷ்!
ஆர்.கே. சுரேஷ்!

ஆருத்ரா வழக்கு: விசாரணைக்கு ஆஜரான ஆர்.கே. சுரேஷ்!

துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம் முறைகேடு தொடர்பாக ஆர்.கே.சுரேஷை விசாரிக்க சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஆனால், துபாயில் இருந்த ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகாததால் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த ‘லுக் அவுட்’ நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிசம்பர் 10-ஆம் தேதி அவர் நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, துபாயிலிருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ், இன்று மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தார். அப்போது செய்தியாளர்கள், ”நீங்கள் தலைமறைவாகிவிட்டதாக செல்கிறார்களே” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “எல்லாம் இங்க இருக்கும்போது, நான் ஏன் தலைமறைவாகிறேன்” என சொல்லிவிட்டு ஆர்.கே. சுரேஷ் விசாரணைக்கு வேகவேகமாக சென்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com