முருகானந்தம் ஐ.ஏ.எஸ்
முருகானந்தம் ஐ.ஏ.எஸ்

புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் நியமனம்!

Published on

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்தார்.

இந்த நிலையில் சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதலமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். 50ஆவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முருகானந்தம் சென்னையைச் சேர்ந்தவர்.

முருகானந்தம் 1991ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். இவர் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். 2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். ஊரக வளர்ச்சித்துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com