அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆற்றிய சொற்பொழிவு சர்ச்சையான சர்ச்சையான நிலையில், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாவிஷ்ணு என்ற நபர் மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமானப்படுத்திய விவகாரத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.