ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்!
(கோப்புப் படம்)

ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்!

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேசுவரத்திலிருந்து கடந்த நாள்களுக்கு முன்னர்100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை கடற்படைக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பினர்.

இந்த தாக்குதலில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் காயமடைந்த மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com