கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தியேட்டரில் அமைச்சரின் மகன் மீது தாக்குதல்- 6 பேர் தலைமறைவு!

சென்னை தி.நகரில் உள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன், பேரன் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மகன் ரமேஷ்(50), பேரன் கதிர்(17) நேற்று இரவு தி.நகரில் உள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டருக்கு படம்பார்க்கச் சென்றுள்ளனர்.

படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் விசில் அடித்து, கூச்சலிட்டபடி இருந்துள்ளனர். அமைச்சரின் பேரன் அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக பின் மாறியுள்ளது. எதிர்த்தரப்பு தாக்கியதில் அமைச்சரின் மகன், பேரனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

அதற்காக அவர்கள் இருவரும் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தினர் வழக்கு பதிந்து, விசாரித்துவருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com