முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன வரிசை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன வரிசை!

முதல்வரின் வாகன வரிசையில் குறுக்கே வந்த போதை ஆட்டோ!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகன வரிசையில் திடீரெனப் புகுந்த ஆட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் வீடு உள்ளது. இதுவே முகாம் அலுவலகமாகவும் செயல்படுகிறது. 

நேற்றுமுன்தினம் வழக்கம்போல நடைப்பயிற்சிக்காக முதலமைச்சர் வாகனத்தில் சென்றபோது, அவரின் வாகன வரிசையில் ஆட்டோ ஒன்று குறுக்கே நுழைந்தது.

காவல்துறையினர் அந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர். அதில் நான்கு பேர் இருந்தார்கள். 

விசாரணையில் அவர்கள் அரக்கோணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், எழும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டிவருகின்றனர் என்பதும் தெரியவந்தது. 

போதையில் இருந்த ஜீவரத்தினம் (27), கோவிந்தராஜ் (27), கார்த்திகேயன் (30), மணிகண்டன் (26) ஆகிய அவர்களை எச்சரித்துவிட்டு காவல்துறையினர் அனுப்பிவிட்டனர். 

ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com