13 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்த ஆட்டோ கட்டணம்!

Auto price increased
ஆட்டோ கட்டணம் உயர்வு
Published on: 

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் தேதி முதல், தமிழகத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவசப் பேருந்து வசதி விரிவுபடுத்தப்பட்டது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது.

அதைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தீபாவளி பண்டிகைக்கு முன்னர் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படும் என்று உறுதியளித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆட்டோக்கான குறைந்தபட்ச தூரமான 1.8 கி.மீ.க்கு, கடந்த 2013ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.25, தற்போது ரூ.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.12-யில் இருந்து ரூ. 25ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாதைகளில் இயங்கும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 60ஆகவும், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ. 30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு வழக்கமான கட்டணத்திலிருந்து ஒன்றரை மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.

மேலும், ஆட்டோக்கள் காத்திருக்கும் நேரத்திற்கு, ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com