அமெரிக்காவில் வாழும் சமூக ஆர்வலருக்கு வைக்கம் விருது!

தேன்மொழி செளந்தரராஜன்
தேன்மொழி செளந்தரராஜன்
Published on

தமிழக அரசின் 2025ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது எழுத்தாளர் தேன்மொழி செளந்தரராஜன் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவா்கள் நலனுக்காகப் பாடுபட்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுக்காக ஆண்டுதோறும் வைக்கம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான வைக்கம் விருதுக்கு அமெரிக்காவின் கலிபோா்னியாவைச் சோ்ந்த தேன்மொழி செளந்தரராஜன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா் அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆா்வலா் மற்றும் எழுத்தாளா் ஆவாா்.

கட்டமைப்பு ஜாதியத்தால் ஓரங்கட்டப்பட்டவா்களின் உரிமைகளுக்காக அவா் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறாா். அமெரிக்காவிலும், உலக அளவிலும் ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சிவில் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸின் நிறுவனராக உள்ளாா்.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான அவரது பணிகளுக்காகவும் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நீதித் துறையில் அவரது பங்களிப்புகளுக்காகவும் அறியப்படுகிறாா். வைக்கம் விருதானது, ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் ஆகியன அடங்கியதாகும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com