(இடமிருந்து)ஆ.சிவசுப்பிரமணியன், அழகிய பெரியவன், தமிழ்மகன்
(இடமிருந்து)ஆ.சிவசுப்பிரமணியன், அழகிய பெரியவன், தமிழ்மகன்

பபாசி: ஆ.சிவசுப்பிரமணியன் உட்பட 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது!

தென்னிந்திய புத்தக விற்பனயாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

அந்தவகையில், 2024ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உரை நடை பிரிவில் ஆய்வாளர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன், நாவல் பிரிவில் எழுத்தாளர் தமிழ்மகன், சிறுகதை பிரிவில் எழுத்தாளர் அழகிய பெரியவன், கவிதை பிரிவில் கவிஞர் உமா மகேசுவரி மொழிபெயர்ப்பு பிரிவில் எழுத்தாளர் மயிலை பாலு, நாடகம் பிரிவில் நாடகக் கலைஞர் வேலு சரவணன் ஆகியோருக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

(இடமிருந்து) மயிலை பாலு,  வேலு சரவணன், உமா மகேசுவரி
(இடமிருந்து) மயிலை பாலு, வேலு சரவணன், உமா மகேசுவரி

சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்க உள்ள புத்தகக் காட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகளையும், பரிசுத் தொகையையும் வழங்க உள்ளார்.

சென்னை புத்தக்காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com