யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன்
யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன்

யூமா வாசுகிக்கு மீண்டும் சாகித்ய அகடமி விருது; லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார்!

சாகித்ய அகடமியின் நடப்பு ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது, எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட அவரின் தன்வியின் பிறந்த நாள் சிறுகதைத் தொகுப்புக்காக இந்த விருது கிடைத்துள்ளது. 

இதைப்போல, லோகேஷ் ரகுராமன் எழுதி, சால்ட் பதிப்பகம் வெளியிட்ட விஷ்ணு வந்தார் சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக சாகித்ய அகடமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இது இவருடைய முதல் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.   

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருதையும் யூமா வாசுகி பெற்றிருந்தார். மலையாளத்தில் வெளியான கசாக்கிண்ட இதிகாசம் நூலை, இவர் மொழிபெயர்த்து தமிழில் கசாக்கின் இதிகாசம் என காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியானது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com