உளவுத்துறை டி.ஜி.பி.யாக பால நாகதேவி நியமனம்!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Published on: 

தமிழ்நாட்டு காவல்துறையின் உளவுப்பிரிவு டிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர், தற்போது பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். இந்தப் பதவி கூடுதல் டிஜிபி பதவி நிலைக்கு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பிரிவில் இப்போது ஐ.ஜி.யாக இருந்துவரும் சந்தோஷ்குமார் இப்பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் போல, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கூடுதல் டிஜிபி பதவியை, அத்துறையின் ஐஜி ரூபேஷ்குமார் மீனா கூடுதலாக கவனிப்பார் என்றும் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட ஆணையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com