மாதிரிப்படம்
ஏர் இந்தியா விமானம்

திடீரென திருச்சியில் தரையிறக்கப்பட்ட விமானம்- 167 பேர் உயிர் தப்பினர்!

திருவனந்தபுரம்- பெங்களூரு விமானம் ஒன்று எந்திரக் கோளாறு காரணமாக இன்று மதியம் திருச்சியில் தரையிறக்கப்பட்டது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்றுகொண்டிருந்தது. மதியவாக்கில் திருச்சி வான்பரப்புக்கு அருகில் பறந்துசென்ற போது, விமானத்துக்குள் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்றும் உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொண்டு விமானம் பத்திரமாக திருச்சி விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. 

விமானப் பொறியாளர்கள் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோளாறு சரிசெய்யப்பட்டபின் விமானம் புறப்படும் என்றும் ஒருவேளை பழுது சரியாக நேரம் எடுத்தால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமானச் சிப்பந்திகள் உட்பட மொத்தம் 167 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com