நோட்டாவை முதலில் வென்று காட்டுங்கள்: அண்ணாமலைக்கு சவால் விட்ட ஜெயக்குமார்!

நோட்டாவை முதலில் வென்று காட்டுங்கள்: அண்ணாமலைக்கு சவால் விட்ட ஜெயக்குமார்!

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியதாவது:

“எங்களுக்கு பிரதான எதிரி தி.மு.க.தான். எங்கள் தலைவர்களான எம்.ஜி.ஆரை, அண்ணாவை சிறுமைப்படுத்தியவர்களோடு எங்களுக்கு உறவு தேவையில்லை. பா.ஜ.க. மதவாத சக்தி. இப்போதில்லை… எப்போதில்லை என்ற வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. பா.ஜ.க. அல்லாத கூட்டணிதான் எங்களின் நிலைப்பாடு. அதனால், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கும்.

அண்ணாமலையை பார்த்து ஏன் நாங்கள் கத்தப்போகிறோம். அவரை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முதலில் நோட்டாவில் அவரை வெற்றி பெற சொல்லுங்கள். அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகரின் பேட்டியைப் பாருங்கள். அண்ணாமலையின் நடைப்பயணம் குறித்து எந்தளவுக்கு கொச்சைப்படுத்தியிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com