நாளைய பி.எட். சேர்க்கைக் கலந்தாய்வு தள்ளிவைப்பு!

lady willington instititue
லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரி
Published on

சென்னையில் நாளை நடைபெறவிருந்த இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு- பி.எட். சேர்க்கைக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

சென்னை, சுற்றுப்புற மூன்று மாவட்டங்களிலும் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை, லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட். (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (15.10.2024) நடைபெற இருந்தது.

கனமழை காரணமாக அது தள்ளிவைக்கப்படுவதாகவும், வரும் 21.10.2024 (திங்கள்கிழமை) அன்று கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கல்லூரிக்  கல்வி ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com