இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கடைசிப் படத்தின் டீசர் வெளியீடு!

Pulavar Film Teaser out
புலவர் பட டீசர் வெளியீடு
Published on

இயக்குநர் பாரதிராஜா கதை நாயகனாக நடித்துள்ள கடைசிப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா கடந்த ஜூனில் மறைந்த நிலையில், ‘புலவர்’ என்ற திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள அந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘இயக்குநர் இமயம்‘ என்றழைக்கப்படும் பாரதிராஜா, இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் அனைவரின் மனதிலும் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.

முருகையா இயக்கத்தில் பாரதிராஜாவின் கடைசி நடிப்புடன் உருவாகியுள்ளது ‘புலவர்‘ திரைப்படம். இந்தப் படத்தில், ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உட்பட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் டாக்கீஸ், ஒயிட் நைட்ஸ் நிறுவனங்கள் சார்பில் சபீர் பாரத், காசி விஸ்நாதன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

அஜ்மல் கான் இசை அமைத்துள்ளார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com