சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரி நியமனம்!

பவானீஸ்வரி ஐபிஎஸ்
பவானீஸ்வரி ஐபிஎஸ்
Published on

முதலமைச்சர் விஜய் அறிவித்த சிங்கப்பெண் சிறப்புப் படையின் ஐ.ஜி.ஆக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். 

சற்றுமுன்னர் உள்துறைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்ட உத்தரவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமன், சிவில் சப்ளை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அபிசேக் குப்தா தூத்துக்குடிக்கும், கள்ளக்குறிச்சி எஸ்பி அரவிந்த் காஞ்சிபுரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆவடி சிறப்புக் காவல்படை தளபதி பிருந்தா நீலகிரி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com