போலீசில் புகார்- கண்ணீர் விட்டு அழுத பிக்பாஸ் ஜூலி!

போலீசில் புகார்- கண்ணீர் விட்டு அழுத பிக்பாஸ் ஜூலி!
Published on

சமூக ஊடக பிரபலமான பிக்பாஸ் ஜூலி இன்று காலையில் சென்னை போலீஸ் ஆணையரயகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கண்ணீர்விட்டு அழுதார். 

கிட்னி விற்றுத் தருவதாக தான் 15 இலட்சம் ரூபாய் வாங்கியதாகப் பொய்யைப் பரப்புகிறார்கள் என்றும் இதில்தனக்கோ தன் கணவருக்கோ எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் மறுத்தார். 

விஜய்யை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக இப்படி செய்கிறார்கள் என்றும் ஜூலி குற்றஞ்சாட்டினார். 

இடையிடையே கண்ணீர்விட்டு அழுத அவர், “இவ நாடகமாடுறானுகூட நினைச்சுக்கங்க... இப்பதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. மார்ச் மாசமே நான் புகார் கொடுக்கவந்தேன். இதனால என் குழந்தை கருவிலேயே கலைஞசிருச்சு.” என உருக்கமாகவும் பேசினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com