தலைமறைவான பிக்பாஸ் முத்துக்குமரன்!

Biggboss muthukumaran absconded
முத்துக்குமரன் தலைமறைவு
Published on: 

பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் முத்துக்குமரன். அண்மையில், இவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகப் பழகி, ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டா பிரபலம் வஹிதா என்பவர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ஆனால், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளைப் பரப்புவதாக வஹிதா மீது சென்னை காவல் ஆணையத்தில் முத்துக்குமரன் புகார் அளித்தார். அந்தப் புகாரில், வஹிதா மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் எதுவும் இல்லை என்று போலீசார் முத்துக்குமரனிடம் தெரிவித்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து, முதலில் திருமணம் செய்வதாகக் கூறி பழகிய முத்துக்குமரன், தற்போது மறுப்பதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால், தான் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் வஹிதா சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து, முத்துக்குமரன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 69-இன் கீழ் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்காக முத்துக்குமரனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram