ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

முதல் கட்சியாக பா.ஜ.க. அணியில் இணைந்த த.மா.கா.!

தமிழ்நாட்டில் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததுள்ளது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.

அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

"பா.ஜ.க. தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று மாலை த.மா.கா. அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார். சுமார் 30 நிமிடம் பேசினோம். பல்லடத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து த.ம.க. தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.” என்று வாசன் கூறினார்.

உடனிருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலில் கூட்டணியில் சேர்ந்ததற்காக வாசனுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். ஏகமாக, அவரைப் புகழ்ந்து தள்ளினார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com