ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

பா.ஜ.க. அணியில் முதல் உடன்பாடு: புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு!

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல் உடன்பாடாக, புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உடன்பாடு, பா.ஜ.க. மாநிலத் தலைமையகமான  கமலாலயத்தில் சற்று முன்னர் கையெழுத்தானது.

பா.ஜ.க. தரப்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய நீதிக் கட்சி சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஏ.சி. சண்முகம் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியான நிலையில், வேலூரில் தற்போதைய எம்.பி. கதிர் ஆனந்தே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த முறை, கதிர் ஆனந்துடன் போட்டியிட்டு கடும் போட்டியைக் கொடுத்த ஏ.சி.சண்முகம், இரண்டாவது முறையாக தேர்தல் களத்தில் மோதுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com