தமிழ் நாடு
தமிழக பா.ஜ.க. முன்னாள்தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக கட்சித் தலைவர் நிதின் நபினிடம் கடிதம் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்தரான அமித்ஷாவைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.
பிரதமர் மோடியையும் அவர் சந்திப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அப்படியொரு சந்திப்பு நிகழவில்லை.
இந்த நிலையில், அவருடைய விலகலை கட்சித் தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டார் என்று பா.ஜ.க. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.