அம்மன் அர்ஜூனன் பரபரப்பு பேட்டி
அம்மன் அர்ஜூனன் பரபரப்பு பேட்டி

பா.ஜ.க., எம்.எல்.ஏ.கள் அ.தி.மு.க.வில் இணைவார்கள்! - அம்மன் அர்ஜுனன் பரபர பேட்டி

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் இன்று மதியம் அ.தி.மு.க. வில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பரபரப்பாக பேட்டிக் கொடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கூறியதாவது:

பா.ஜ.க.வினர் பிள்ளை பிடிக்கிற மாதிரி அலைகிறார்கள். பிள்ளை கிடைக்கவில்லை என்பதால் தான் நேற்று செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார்கள்.

பா.ஜ.க.விலிருந்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் 2:15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர். பா.ஜ.க., எம்.எல்.ஏ.கள் இருவரும் கொங்கு அல்லது தென்மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

பா.ஜ.க.வின் உண்மையான பி டீம் தி.மு.க. நான் இங்க ராஜாக இருக்கிறேன்; அங்கு போய் எதற்கு கூஜாவாக இருக்க வேண்டும். இந்த 40 தொகுதியில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் வெற்றி பெற்று காட்டட்டும். இதென்ன வடக்கு என்று நினைத்தார்களா? இது தென்மாநிலம். உங்களின் சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.” என்று அம்மன் அர்ஜூனன் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com