அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ வழக்கு... ஆளுநரிடம் புகார்!

nainar complaint against minister viswanathan
உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதனுக்கு எதிராக ஆளுநர் நயினார் புகார் மனு
Published on: 

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொறுப்பு ஆளுநர் அர்லேகரிடம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் மனு அளித்தார்.

மதுரையை அடுத்த மேலூர் பகுதியில் கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாணவிகளில் சிலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவரின் கால் விரல்களைத் தொட்டுப் பிடித்துவிட்டதாக விஸ்வநாதன் மீது கடுமையான கண்டனம் எழுந்தது.

அவரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என பல தரப்புகளிலும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், இன்று பொறுப்பு ஆளுநர் அர்லேகரை ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து இதுபற்றி புகார் மனுவை அளித்தார். விஸ்வநாதன் மீது போக்சோ வழக்கு பதியவேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com