கரூர் கொடுந்துயரில் அரசியல் விளையாட்டை தொடங்கிய பாஜக! - திருமா

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
Published on

“கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பாஜக வெளிப்படையாகத் தொடங்கிவிட்டதாக விசிக தலைவ தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.

கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.

இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.

எனவே, ராகுல் காந்தி அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com