பெண் புகாரில் பதவிநீக்கம் - பா.ஜ.க. கருப்பு முருகானந்தம் விளக்கம்!

கருப்பு முருகானந்தம், பா.ஜ.க.
கருப்பு முருகானந்தம், பா.ஜ.க.
Published on

பெண் ஒருவர் அளித்த புகாரின்படி, பா.ஜ.க. மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் அக்கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கருப்பு முருகானந்தம் சார்பில் மறுப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ”ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றித் தூய்மையான முறையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்த ஒன்றாகும். இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இது தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இருவரிடமும் ஏற்கெனவே பேசியுள்ளேன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறான எவ்வித விசாரணையுமின்றி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com