நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.
நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.

பா.ஜ.க. பேசுவதுதான் உண்மையான சமூகநீதி! - நாராயணன் திருப்பதி

“சமூகநீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுவாரா? என்று பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர்: “கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் பாஜக அரசு அமைந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் மத்திய அரசின் துறைகளில் உரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2014 முதல் தற்போது வரை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 % பட்டியலினத்தைச் சேர்ந்தோருக்கும், 8 % பழங்குடியினத்தோருக்கும், 30 % இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகின்றன.” என்று கூறியுள்ளார்.

மேலும், “உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவு மாணவ, மாணவிகள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-21இல், 28 % பட்டியலின மாணவர்களும், 47% பழங்குடியின மாணவர்களும், 31.7% இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களும் மத்திய அரசின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இணையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது பாஜக அரசில் இட இதுக்கீட்டை சிறந்த அளவில் செயல்படுத்தியுள்ளது என்பதை தெளிவாக்குகிறது.

ஆனால், தி.மு.க. அங்கம் வகித்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்தபோது 12 % க்கும் குறைவான இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மட்டுமே மத்திய அரசு பணிகளிலிருந்தனர் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்க முடியுமா? 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முழுமையாகப் பணி நியமனம் செய்யாதது ஏன் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும்? இனிமேலும் பா.ஜ.க. அரசு குறித்த உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியைப் பின்பற்றுவாரா முதல்வர்?” என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com