வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றியின் சடலம் மீட்பு!

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி, 8 நாள்களுக்குப் பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றி துரைசாமி கடந்த 4ஆம் தேதி காரில் நண்பர்களுடன் வட மாநிலங்களுக்குப் பயணம்செய்தபோது, இமாச்சலப்பிரதேச மாநிலம் சட்லஜ் ஆற்றில் காசங் நாலா எனும் இடத்தில், அவர்கள் சென்ற கார் ஆற்றுக்குள் விழுந்தது.

அதில் ஓட்டுநர் உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் பயணம்செய்த கோபி மட்டும் உயிர்தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

வெற்றியின் நிலை என்னவென்று தெரியாமல் நீடித்துவந்த நிலையில், அவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டது.

இமாச்சல் மாநில காவல்துறையுடன் தமிழ்நாடு காவல்துறையும் சில உதவிகளைப் புரிந்தது. வெற்றியின் உறவினர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டன.

இந்த நிலையில், இன்று, வெற்றியின் உடலம் கார் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை துணை ஆணையர் அமித் சர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com