கோவை ஊழலால் திருச்சி காமராசர் நூலகக் கொள்முதல் ரத்து!

பெருந்தலைவர் காமராசர் நூலகம், திருச்சி
பெருந்தலைவர் காமராசர் நூலகம், திருச்சிமாதிரிப் படம்
Published on: 

கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு காரணமாக, திருச்சியில் அமையவுள்ள காமராசர் நூலகத்துக்கான கொள்முதலை இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதியன்று, கோவை பெரியார் அறிவுலகம் உட்பட புதிய ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், ஆறு புதிய மாவட்ட நூலகங்களுக்கும் நூல்களைக் கொள்முதல்செய்ய முன்னைய தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்தது.

அண்மையில் போலிப் புத்தக மோசடி அம்பலமானதால் பதிப்புத் துறையே பரபரப்புக்கு உள்ளானது.

இந்த நிலையில், அடுத்து திருச்சியில் திறக்கப்படவுள்ள காமராசர் அறிவுலக நூலகத்துக்காக வாங்கப்பட்டிருந்த நூல்களை இரத்துசெய்வதாக பொதுநூலகத் துறை அறிவித்துள்ளது.

கூடுதல் பொறுப்பாக இதை கவனித்துவந்த ஜெயந்தி அனைத்து சிறப்பு நூலக ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கடந்த 6ஆம் தேதி இதற்கான உத்தரவை அனுப்பியுள்ளார்.