Bose Venkat - vijay
போஸ் வெங்கட் - விஜய்

'யப்பா... உன் கூடவுமா அரசியல் பண்ணனும்...?’ விஜய்யை விமர்சித்த போஸ் வெங்கட்!

Published on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சை இயக்குநர் போஸ் வெங்கட் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இவரின் எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.

மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 'கன்னிமாடம்', 'சார்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சை மறைமுகமாக நடிகர் போஸ் வெங்கட் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

அதன்படி, அவர் அந்த பதிவில், 'யப்பா... உன் கூடவுமா அரசியல் பன்னனும்... பாவம் அரசியல்... பள்ளிக்கூட ஒப்பிப்பு… சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி... வியப்பு... எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்… முடிவு??? பாப்போம்...' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பேசிய போஸ் வெங்கட், சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com