அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

பட்ஜெட் விளக்கக் கூட்டம்: தி.மு.க. அடுத்த கட்டப் பிரச்சாரம்!

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் மார்ச் 2, 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் “எல்லோருக்கும் எல்லாம்”, “திமுக நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!” நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற மார்ச் 2,3, மற்றும் 4ஆம் தேதிகளில் மாநகரம், நகரம் ஆகிய பகுதிகளில் ’எல்லோருக்கும் எல்லாம்’, ‘திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்’ நடத்திட வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச்-4ஆம் தேதி செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், யார்யார் எந்த தேதியில் பேசுகிறார்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com