தமிழ் நாடு
மதுராந்தகம், தாராபுரம் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று மதியம் 1 மணியளவில் பதிவாகியுள்ள வாக்களிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.
இரு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மதியம்வரை பெரும்பாலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடைபெற்றது.
இந்நிலையில், நண்பகல் 1 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 55.19% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தாராபுரத்தில் 56.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 56.27% வாக்குகள் பதிவாகியுள்ளன.