முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் தலைமையில் ஜனவரி23 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வருகிற 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல் அளிப்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com