நாளிதழ்களில் பாஜக செய்துள்ள விளம்பரம்
நாளிதழ்களில் பாஜக செய்துள்ள விளம்பரம்

100 கேள்விகளில் ஒன்றுக்குப் பதில் சொல்ல முடியுமா…? முதல்வருக்கு பா.ஜ.க சவால்!

இன்றை நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ள தமிழக பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நூறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரங்களும், கட்சிகள் மீதான விமர்சனங்களும் அனல் பறக்கின்றன.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 100 கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்றைய அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்துள்ள தமிழக பா.ஜ.க., “பிரதமர் மோடி அரசைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் தமிழகத்தின் தீயசக்தி 100 கேள்விகளில் ஒன்றுக்காவது பதில் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அவற்றில் சில

1. ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி எண். 373-ல் கூறினீர்களே, எப்போது வழங்குவீர்கள்?

2. எதிர்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சொன்ன நீங்கள் ஆளுங்கட்சியானதும் வழங்காதது ஏன்?

3.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, போதிய முன்னேற்பாடுகள் செய்யாமல் அவசரகதியில் திறந்து மக்களை அவதிக்குள்ளாக்கியது ஏன்?

4.கரும்புக்கான ஆதார விலையை ரூ.4000-ஆக உயர்த்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி எண்.75-ல் கூறினீர்களே.எப்போது செய்வீர்கள்?

5. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்றால் மூலப்பத்திரத்தை பகிரங்கமாக மக்களிடம் காட்டலாமே?

6.வாக்குறுதியே அளிக்காமல் பெட்ரோலுக்கு ரூ.15 டீசலுக்கு ரூ.18 குறைத்தது மத்திய அரசு. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோலுக்கு ரூ.5 டீசலுக்கு ரூ.4 குறைப்போம் என்று கூறிய நீங்கள் எப்போது நிறைவேற்றுவீர்கள்?

7. இந்தியாவில் அதிகமான மலக்குழி மரணங்கள் தமிழ் நாட்டில் தான் நடக்கிறது என்பதை தெரிந்தும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததது ஏன்? மனித கழிவுகளை மனிதரே அகற்றும் கொடூரம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று நீங்கள் கொடுத்த உறுதிமொழி. ஆட்சி அமைத்ததும் மறந்து போச்சா?

8.தூய்மையான முதல் 100 நகரங்கள் பட்டியலில். தமிழக நகரங்கள் ஒன்று கூட இல்லை என்கிற தகவல் உங்களுக்கு தெரியுமா?

9. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2500 ஆக உயர்த்துவோம் என்று கூறினீர்களே, எப்போது செய்வீர்கள்?

10. நியாய விலை கடைகளில் நாட்டுச்சக்கரையும், வெல்லமும் விநியோகிக்கப்படும் வாக்குறுதி எண்.68-ல் செய்வீர்கள்? என்று தேர்தல் கூறினீர்களே,எப்போது செய்வீர்கள்?

11. மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி எண். 503ல் கூறினீர்களே, எப்போது செவீர்கள்?

இவ்வாறு நூறு கேள்விகளை பா.ஜ.க. எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com