வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியிடும் தொ.திருமாவளவன்
வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியிடும் தொ.திருமாவளவன்

இடபிள்யூஎஸ் ரத்து! – வி.சி.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சிதம்பரத்தில் வெளியிட்டார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்

*இந்தியா முழுவதும் இல்ல தலித் குடியிருப்புகள் சேரி, காலனி அல்லது அந்தந்த மாநில மொழிகளில் வழங்கும் சொற்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டு மக்களின் விருப்பப்படி தனிப்பெயரை சூட்டிக்கொள்ளவும், அவற்றை முறையாக அரசு ஆவணங்களில் பதிவிடவும் தனி அறிவிப்பு அல்லது சட்டம் கொண்டுவர விடுதலைச் சிறுத்தைகள் குரல் எழுப்பும்.

* இந்தியா முழுவதும் இடுகாடுகளில் பிணம் எரித்தல் மற்றும் பிணம் புதைத்தல் ஆகிய பணிகளில் அனைத்துச் சமூகத்தினரும் பங்கேற்கின்ற வகையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், இந்தப் பணிகளில் இருந்து முழுமையாக தலித்துகள் விலக்கப்பட்டு, வேறு பணிகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

* தேசிய மனித உழைப்பு நேரம் மற்றம் மதிப்புக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அதை முறைப்படுத்தும் ஓர் அமைப்பும் அமைக்கப்பட வேண்டும். அதன்கீழ் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உழைப்பு நேரஅடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு 56 மணிநேரம் உழைப்பிற்கான ஊதியத்தை ஒருவர் பெற்றிருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் அதற்கான பண இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வலிறுத்துவோம்.

* அரசுத் துறைகளில் நிறைந்திருக்கும் சனாதன சக்திகளை அகற்ற முயற்சிப்போம்

* இந்திய நிலப்பரப்பில் தொடரும் சீன ஆக்கிரமிப்பை மீட்பதற்குக் குரல் கொடுப்போம்

* ராமர் கோவில் கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

* கச்சத்தீவு மீட்பதற்கு குரல் கொடுப்போம்

* வகுப்புவாத பிரிவினையைத் தூண்டும் சட்டத் திருத்தங்கள் நீக்க நடவடிக்கை வேண்டும்

* ஆளுநர் பதவி ஒழிக்க வலியுறுத்துவோம்

* புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க வேண்டும்

* பதினாறாவது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வு நீதியை நிலைநாட்டுவது

* அனைத்து மாநில மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள்

* அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத் திருநாளாக அறிவிக்க வேண்டும்

* ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு

* மின்னணு வாக்கு எந்திர முறைக்குப் பதில் – தாள் வாக்குப்பதிவு

* விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும்

* தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பு

* வறுமைக்கோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துதல்

* 200 நாள் வேலை நாட்களை உறுதி செய்தல் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துதல்

* தலித் மற்றும் பழங்குடியினருக்குத் தனி வங்கி

* ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ரத்து

* விவசாயக் கடன் ரத்து செய்ய வலியுறுத்துவோம்

* விவசாயத்திற்குத் தனி பட்ஜெட்

* நீதித் துறையில் இடஒதுக்கீடு

* தனியார் துறையில் இடஒதுக்கீடு

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்

* உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து

* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தப்படும்

* தமிழை ஆட்சிமொழியாக்க வலியுறுத்துவோம்

* தமிழ்நாடு மாநிலத்திற்கென தனிக்கொடி

* அணுமின் நிலையங்கள் மூட குரல்கொடுப்போம்

* இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வலியுறுத்தல்

* எஸ். சி / எஸ்.டி இடஒதுக்கீடு பாதுகாப்பு

* ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்

* மூன்றாம் பாலினத்தவருக்கு அரசியல் பிரதிநிதித்துவம்

* நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தப்படும்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com