
தேர்தல் விதிகளை மீறியதற்காக வேலூர் மேயர் தி.மு.க.வின் சுஜாதாவின் காரை தேர்தல் பணி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபின்னரும் மேயர் சுஜாதா விதிகளை மீறுவதாக மாநகர அ.தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று வணிக வளாகம் ஒன்றில் மேயர் சுஜாதா விளையாட்டு உபகரணங்களைக் கொள்முதல் செய்து இளைஞர்களுக்கு வழங்குவதற்காகத் திட்டமிட்டிருந்ததை அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர் அப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் தெரிவித்தார்.
அதன்படி, தேர்தல் பறக்கும் படையினர் மேயரின் காரை சோதனைக்காக நிறுத்தினர். ஆனால் அவருடைய ஓட்டுநர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதற்காக, தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்தனர். முதல் கட்டமாக, மேயரின் ஓட்டுநர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அத்துடன், மேயர் சுகாதாவின் காரையும் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் அதிகாரிகளின் இந்த கறார் நடவடிக்கையால், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.