அண்ணாமலை மீது வழக்கு- கொலை பற்றி புரளி பரப்பிய குற்றச்சாட்டு!

அண்ணாமலை
அண்ணாமலை
Published on

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோமதி என்பவர் கடந்த 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். தேர்தல் தகராறு காரணமாகத்தான் அவர் கொல்லப்பட்டார் என சமூக ஊடகங்களில் பலரும் தகவல்களைப் பரப்பினார்கள். 

இந்நிலையில், இந்தக் கொலையில் தி.மு.க.வினருக்குத் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் சமூக ஊடகப் பக்கங்களில் கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது. 

அதைத் தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக புரளி பரப்பிய மூவர் மீது வழக்கு பதியப்பட்டது. 

தொடட்ர்ந்து, அண்ணாமலை மீதும் ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தினர் வழக்கு பதிந்துள்ளனர்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com