திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாதாரணமானவரைப் போல ஆய்வுக்குச் சென்ற அமைச்சரிடம் இலஞ்சம் வாங்கிய அர்ச்சகர் ஐயப்பன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அர்ச்சகர் ஐயப்பன் மறு உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் எவ்வித பூஜையும் செய்யக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அர்ச்சகர் ஐயப்பனுடன் கூட்டு சேர்ந்து, அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாகப் பக்தர்களை உள்ளே அனுமதித்ததாக சண்முக விலாச முகப்பு வாயில் காவலர்களும் முன்னாள் ராணுவ வீரர்களுமான கருப்பசாமி, தோப்பு ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முன்னாள் பாதுகாப்புப் படையினர் கழகத்துக்கு அறநிலையத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னதாக, அர்ச்சகரிடம் விளக்கக் கடிதம் மட்டும் வாங்கிவிட்டு விடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பலத்த விமர்சனம் எழுந்தது.
அப்படி பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை என இந்து சமயத் துறை அமைச்சர் இரமேஷ் விளக்கம் அளித்தார்.