பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு!

Case filed against Biggboss Muthukumaran
பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு
Published on: 

பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகப் பக்கமான இன்ஸ்டாவில் பிரபலமான இளம்பெண் வஹிதா என்பவர், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மக்களிடையே பிரபலமானவர் முத்துக்குமரன். அண்மையில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முத்துக்குமரன் தற்போது மறுப்பதால் தற்கொலைக்கு முயல்வதாக இன்ஸ்டா பிரபலம் வஹிதா சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக தன்னைப் பற்றிய அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாக முத்துக்குமரன் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரில் வழக்குப்பதிவு செய்வதற்கான குற்றவியல் முகாந்திரம் இல்லை என்று காவல்துறை தெரிவித்திருந்தது.

அதையடுத்து, முத்துக்குமரன் மீது வஹிதா சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, முத்துக்குமரன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 69-இன் கீழ் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram