கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் புகாரின்பேரில், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 பிரிவுகள்:
1) பி.என்.எஸ். பிரிவு 75(1)(i) - விரும்பத்தகாத செயல்பாடுகளைக் கொண்ட பாலியல் துன்புறுத்தல்.
2) பி.என்.எஸ். பிரிவு 75(1)(iv) - பாலியல் சாயல் கொண்ட கருத்துகளை தெரிவித்து துன்புறுத்தல்.
3) பி.என்.எஸ். பிரிவு 78(2) - பின்தொடர்ந்து துன்புறுத்துவது
4) பி.என்.எஸ். பிரிவு 132 - ஒரு பொது ஊழியரைக் கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் வகையில் செய்வது
5) பிரிவு 4 - தமிழ்நாடு மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம்.