தஞ்சை காவிரிப் போராட்டத்தில் ஆபாசமாக, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகளின் விவரம்:
1) 196 பி.என்.எஸ். - பகைமையைத் தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்.
2) 192 பி.என்.எஸ். - கலவரத்தைத் தூண்டுதல்.
3) 352 பி.என்.எஸ். - பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்.
4) 79 பி.என்.எஸ். - பெண்களின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல்.
5) 296(பி) பி.என்.எஸ். - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்.
6) 61 பி.என்.எஸ். - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோதச் செயலை செய்யத் திட்டமிடுதல்.
7) 351 பி.என்.எஸ். - ஒருவருக்கு மிரட்டல் விடுவது.
8) தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4.
9) தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67.