காவிரி டெல்டா: ஹைட்ரோ காா்பன் எடுக்க புதிய உரிமம் வழங்கவில்லை! - தமிழக அரசு

காவிரி டெல்டா: ஹைட்ரோ காா்பன் எடுக்க புதிய உரிமம் வழங்கவில்லை! - தமிழக அரசு

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி, மாா்க்ஸ் என்பவா் 2019-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய பெட்ரோலியத்துறைச் செயலாளர் மற்றும் மத்திய வேளாண் துறைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குதமிழக அரசு உரிமம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பகுதிகளில் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

மேலும் தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டுச் சட்டத்தை இயற்றியுள்ளதால், அந்த சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், காவிரிடெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இதுவரை எந்தபுதிய உரிமமும் வழங்கப்பட வில்லை என்றார். அதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com