தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வு ஐ.ஜி. தேன்மொழி அதிரடி மாற்றம்!

தமிழகக் காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவு சரக காவல்தலைவர் தேன்மொழி இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை, வண்டலூரை அடுத்த ஊமனஞ்சேரியில் உள்ள காவல்துறை பயிற்சிக்கல்லூரியில் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருச்சி வடக்கு துணை ஆணையர் அன்பு, சென்னை இரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர்தெற்குதுணைஆணையர் வனிதா, சென்னையில் உள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், 

இப்போது அந்தப் பணியில் இருக்கும் ரமேஷ்பாபு, சென்னைப் பெருநகர நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், 

அங்கு பொறுப்பிலிருக்கும் எஸ்.எஸ்.மகேசுவரன் சென்னைப் பெருநகரப் பாதுகாப்புப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ரோகித் நாதன் ராஜகோபால் அதே நகரில் காலியாக உள்ள போக்குவரத்துப் பிரிவுக்கும், 

மதுரை தெற்கு துணை ஆணையர் பி. பாலாஜி அங்கிருந்து காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவலர்நலன்கள் பிரிவு உதவி சரகத் தலைவராகவும்,

நாகையை மையமாகக் கொண்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், சென்னைப் பெருநகரக் காவல் நிருவாகப் பிரிவு துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com