போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்... காவல் மரணமாகப் பதிவுசெய்த சி.பி.சி.ஐ.டி.!

Balakrishnan's death registered as custodial death
பாலகிருஷ்ணனின் மரணம் காவல் மரணமாக பதிவு
Published on: 

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மர்மமாக இறந்த வழக்கை காவல் மரண வழக்காக சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காகச் சென்ற நிலையில், கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று வெளியிடப்பட்ட அவருடைய சடலக்கூராய்வு அறிக்கையில், அவரின் உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக்காயமும், மூளையில் ரத்தக்கசிவும், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளில் வீக்கமும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் மரணத்தை காவல் நிலைய மரணமாக சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்து, விசாரணையைத் தொடர்ந்து வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram