சிபிஎஸ்இ தேர்வு முடிவு எப்போது?

சிபிஎஸ்இ தேர்வு (மாதிரிப்படம்)
சிபிஎஸ்இ தேர்வு (மாதிரிப்படம்)
Published on

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்- சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஆண்டுதோறும் மே மாதத்தில் தேர்வு முடிவை வெளியிடுவதால் மாணவர்கள் அவதிப்படுவதாகப் பிரச்னை எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு இரண்டாம் நிலைத் தேர்வு மே 15ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் குறிப்பிட்ட மூன்று பாடங்களில் அதிகரிக்கும் மதிப்பெண்களை மாணவர்கள் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு அதற்கு வசதியாக தேர்வு முடிவை ஏப்ரல் மாதத்திலேயே வெளியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்று வெளியாகும் என உறுதியாகத் தெரிவிக்கப்படாத நிலையில், இன்று வெளியிடப்படும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.

மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கும்போது, இணையதளம் முடங்கி நின்றுவிட வாய்ப்பு உண்டு என்பதால், டிஜிலாக்கர் முறை மூலம் தேர்வுமுடிவைத் தெரிவிக்கவும் சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது.

கடைசித் தகவல்: ஆனால் எதிர்பார்க்கப்பட்டபடி முடிவுகள் வராதநிலையில் எந்நேரமும் வரலாம் எனக் கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com